அகழி = CUTTER
------------------------------------------------------------------------------------
அகழ்தல் என்ற சொல்லுக்கு
தோண்டுதல்,
கல்லுதல், உழுதல், துருவுதல், அரிதல், அறுத்தல் எனப் பலவாறு
பொருள் சொல்கிறது தமிழகராதி “.கிழங்கு கல்லி மாவெடுப்போம்” என்ற நாட்டுப் புறப் பாடலைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
”அகழ்வரைத்
தாங்கும் நிலம் போல“ என்னும் குறள் “தோண்டுதல்” என்ற பொருளிலேயே கையாளப் பட்டுள்ளது.
அகழப்பெற்று உருவாக்கப்
பெற்றது அகழி. நகரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு மன்னர்களால் கோட்டையைச்
சுற்றித் தோண்டப் பெற்றுத் தண்ணீர் நிரப்பப்பெற்ற நீர் நிலைக்கு அகழி என்று பெயர்.
பரிகம், கிடங்கு, கேணி, ஓடை என்றெல்லாம் பொருள்
சொல்கிறது சூடாமணி நிகண்டு
“அகழ் இகழ்ந்தன்ன கான்
யாற்று நடவை “ என்கிறது மலைபடுகடாம் ( பாடல் வரி 214)
ஆங்கிலத்தில் “ கட்டர் “ என்று சொல்லப்படும்
கருவியில் பலவகை உண்டு. . மாழைத் துண்டினை (Metal Block) இரண்டாகத் துண்டிக்க (Parting), பயன்படுத்தப் படுவது ”சிலிட்டிங் சா கட்டர்”.
அகழி போல் நீண்ட பள்ளம்
தோண்ட உதவுவது “சிலாட்டிங் சா கட்டர்” மேல் தளத்தைச் சீராகத்
துருவப் பயன்படுவது “சிலிண்டிரிகல் கட்டர்” சக்கர விளிம்பில் பற்கள் தோண்டப் பயன்படுவது “ இன்வாலியூட் கியர் கட்டர்
“
சமதளத்தில் குழிப்புச்
செய்யப் பயன்படுவது “உட் ரப் கட்டர்” இந்தக் “கட்டர்கள்” துண்டித்தாலும், தோண்டினாலும், துருவினாலும், அகழ்ந்தாலும், செதுக்கினாலும், சுரண்டினாலும் அங்கு நடைபெறும் வினை, தேவையான அளவுக்கு மாழையை அகழ்வது தான். இந்த இடத்தில் முதல்
பத்தியை மீண்டும் ஒருமுறைப் படித்துப் பாருங்கள்.
இவ்வாறு மாழையை ( Metal Piece or Block )
அகழ்வு செய்து
வினைப்பொருளை (Job)
நாம் விரும்பும்
அளவுகளின் படி உருவாக்கித் தரும் “கட்டர்” என்னும் கருவியை “ அகழி “ என்று அழைப்பதில் பிழை இருக்க முடியாது. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள்
தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லையே?
“கட்டர்” என்ற சொல்லுக்குக் கட்டாய
ஓய்வு கொடுப்போம் ! “ அகழி “ என்ற சொல்லை அரியணையில் அமர்த்துவோம் !
வாருங்கள் நண்பர்களே ! “ அகழி “ என்ற சொல்லின்
அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போம் !!!
==================================================
CUTTER |
= அகழி |
SLITTING SAW CUTTER |
= சிறுவாய் அகழி |
SLOTTING SAW CUTTER |
= பெருவாய் அகழி |
SIDE & FACE CUTTER |
= புடை முக அகழி |
END MILL CUTTER |
= முனை அகழி |
SHELL END MILL CUTTER |
= ஊரி முனை அகழி |
WOOD RUFF CUTTER |
= பிறை அகழி |
CORNER ROUNDING CUTTER |
= விளிம்பு அகழி |
CONCAVE CUTTER |
= குழி வாய் அகழி |
CONVEX CUTTER |
= குவி வாய் அகழி |
SINGLE ANGLE CUTTER |
= ஒருச் சரிவு அகழி |
DOUBLE ANGLE CUTTER |
= இருச் சரிவு அகழி |
EQUAL ANGLE CUTTER |
= இணை சரிவு அகழி |
UNEQUAL ANGLE CUTTER |
= உறழ்ச் சரிவு அகழி |
INVOLUTE GEAR CUTTER |
= பல்வரி அகழி |
HELICAL MILLING CUTTER |
= திருகுப் புரி அகழி |
SIDE MILLING CUTTER |
= புடைத் தள அகழி |
FACE MILLING CUTTER |
= முகத்தள அகழி |
CYLINDRICAL CUTTER |
= கிடைத்தள அகழி |
T – SLOT CUTTER |
= அகல் உள் அகழி |
================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”புதிய தமிழ்ச் சொல் ” வலைப்பூ,
[தி.ஆ: 2052, நளி(கார்த்திகை) 29]
{15-12-2021}
===================================================
அகழி = CUTTER. |