ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

சனி, 18 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (39) ஆடை மாடம் = WARDROBE

 


ஆடை மாடம் = WARDROBE

=================================================
பாவையும் எழில்மதியும் அறைகலன் வில்லூரி  (FURNITURE MART) ஒன்றில் சந்திக்கின்றனர் ]
=================================================

பாவை.. எழில் ! நீயெங்கே இங்கே ?


எழில்... “ஸ்டீல் பீரோஒன்று வாங்கலாம் என்று வந்தேன் ! அப்பா சற்று நேரம் கழித்து வருவார் !

பாவை.. நீ ஸ்டீல் பீரோ” (STEEL BUREAU) வாங்கப் போகிறாயா, “ஸ்டீல் கப்போர்டு” (STEEL CUPBOARD) வாங்கப் போகிறாயா அல்லது ஸ்டீல் அல்மிரா” (ALMIRAH) வாங்கப் போகிறாயா ?


எழில்.....என்ன பாவை ! என்னை இப்படிக் குழப்புகிறாய்


பாவை...ஆமாம் எழில் ! 


பீரோ என்றால் இழுவறையுள்ள சாய் தள எழுது மேசை  . இதை சாய்தள மேசைஎன்று சொல்லலாம். ( BUREAU MEANS WRITTING DESK WITH DRAWERS) 


கப்போர்டுஎன்பது நிலைமாடம்” (CUPBOARD MEANS SHELVED CLOSET OR CABINET FOR CROCKERY, PROVISIONS etc.) 


அல்மிரா (அலமாரி)என்பது நிலைப்பேழை” (ALMIRAH MEANS WARDROBE OR MOVABLE CUPBOARD) 


வார்டுரோப்என்பது ஆடை மாடம்” ( WARDROBE MEANS PLACE WHERE CLOTHES ARE KEPT, esp., LARGE CABINET OR MOVABLE  CUPBOARD WITH  PEGS, SHELVES Etc.


ரேக் என்பது நிலையடுக்கு”. (RACK MEANS FIXED OR MOVABLE FRAME OF WOODEN OR METAL BARS FOR HOLDING FODDER, PLATE, HAT, TOOLS, PIPE etc.).

 

ஆனால், நாம் பீரோ, அல்மிரா, கப்போர்டு என்ற பல பெயர்களால் ஒரே பொருளைத்தான் சொல்கிறோம் !


எழில்...என்ன பாவை ! ஒவ்வொன்றுக்குமிடையே வேறுபாடுகள் உளவா ? சுருக்கமாக அவற்றின் பெயர்களை மீண்டும் சொல்லேன் !


பாவை..பீரோ.................= சாய்தள மேசை

                 கப்போர்டு.... = நிலைமாடம்
                அல்மிரா....... = நிலைப்பேழை
                 வார்டுரோப்...= ஆடை மாடம்
                 ரேக்....................= நிலையடுக்கு

எழில்.....நான் நிலைப்பேழை தான் வாங்க வந்திருக்கிறேன் பாவை ! ஆமாம் மேசை என்பது தமிழ்ச் சொல்லா ?


பாவை...அதிலென்ன ஐயம் ? மேல் + செய்= மேல்செய் > மேசெய் > மேசை. நான்கு காலகளில் நிறுத்தப்பட்டு கிடை வசத்தில் இருக்குமாறு கோக்கப்பட்டுள்ள பலகையின் மேல் வைத்துத் தான் நாம் எழுதுதல், வரைதல், படித்தல் போன்ற பணிகளைச் செய்கிறோம். அதனால் தான் (மேல் செய்) மேசை என்ற பெயர் வந்தது. 


எழில்...அப்புறம் ?


பாவை:“சோபாஎன்பது ”ஈரணை”. “ஸ்டூல்என்பது பாண்டில்”. “டீப்பாய்என்பது தேநீர் பலகை. போதுமா ?


எழில்.... இன்று இவ்வளவு போதும் ! நீ சென்று வா ! நான் நிலைப்பேழை வாங்கிக் கொண்டு வருகிறேன்.


 ==================================================


உல்” = உள்ளொடுங்கற் கருத்து வேர். (பாவாணரின் வேர்ச் சொற்கட்டுரைகள்.) உள்ளொடுங்கல் = குறிப்பிட்ட வரம்புக்குள் அடங்குதல்.

உல் > உர் .> ஊர் > ஊரி

==================================================


கல் + ஊரி.... = கல்லூரி

வில் + ஊரி...= வில்லூரி

 

==================================================


 கல்லூரி.......= குறிப்பிட்ட வளாக வரம்புக்குள் ஒடுங்கி இருப்பது, இந்த கல்வி கற்பிக்குமிடம்

 

 வில்லூரி..... = குறிப்பிட்ட கட்டட வரம்புக்குள் அடங்கி, ஒடுங்கி இருப்பது இந்த விற்பனை நிலையம்.

 

==================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ; 2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

==================================================

ஆடை மாடம் = WARDROBE


 

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (38) வாலை = BACHELOR ; மேதை = MASTER.

வாலை = BACHELOR 

மேதை = MASTER

-------------------------------------------------------------------------------------

 

பல்கலைக் கழகங்கள் எனக்குத் தெரிந்த வரை மூன்று விதமான பட்டங்களை வழங்குகின்றன. இளம், முது என்ற முன்னொட்டுடன் சிலவகைப் பட்டங்களும், முனைவர் என்ற பட்டமும் இவற்றுள் அடங்கும் !

 

BACHELOR OF ARTS என்பதை இளங்கலை என்றும், இப்பட்டம் பெற்றவரை கலை இளைஞர்என்றும்சொல்கிறோம். BACHELOR OF SCIENCE என்பதை இளம் அறிவியல் என்றும், இப்பட்டம் பெற்றவரை அறிவியல் இளைஞர்என்றும் சொல்கிறோம். BACHELOR OF COMMERCE என்பதை இளம் வணிகவியல் என்றும் இப்பட்டம் பெற்றவர்களை வணிகவியல் இளைஞர் என்றும் பல்கலைக் கழகங்கள் குறிப்பிடுகின்றன !

 

இளம் என்பது இளமைஎன்ற பொருளிலேயே இங்கு குறிப்பிடப்படுகிறது. இளம்என்பதைக் குறிக்கவால்என்ற வேர்ச்சொல் தமிழில் உள்ளது. இந்த வேர்ச் சொல்லிலிருந்து கிளைத்திருக்கும் பிற சொற்களைப்பாருங்கள் !

 -------------------------------------------------------------------------------------

வால்

-- இளமை

வாலகன்

-- இளைஞன்

வாலச்சந்திரன்

-- இளம் பிறை

வாலம்

-- வாலிபம்

வாலவயது

-- இளவயது

வாலை

-- இளையது, 12 வயதுப் பெண்

 

------------------------------------------------------------------------------------------


வாலை என்பது இளையதுஅல்லது இளநிலைஎன்னும் பொருளைக் குறிக்கும் சொல் என்பதால் BACHELOR என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக வாலைஎன்பதை நாம்பயன்படுத்தலாம். எண்பது வயதான B.A. பட்டம் பெற்ற ஒருவரை கலை இளைஞர்என்று சொல்வது சங்கடமான ஒன்று. ஆனால் அவரை கலை வாலைஎன்று சொல்வதில் அவ்வளவு சங்கடம் தோன்றாது !

 

MASTER OF ARTS என்பதை முது கலை என்றும் இப்பட்டம் பெற்றவரைக் கலை முதுவர் அல்லது முதியர்என்றும் சொல்கிறார்கள். MASTER OF SCIENCE என்பதை முது அறிவியல் என்றும் இப்பட்டம் பெற்றவரை அறிவியல் முதுவர் அல்லது முதியர் என்றும் சொல்கிறார்கள். இவை ஒலி நயமில்லாத, இனிமைக்குறைவான சொற்களாகத் தோன்றுகின்றன.

 

தமிழில் மே என்ற சொல் மேன்மைநிலையைக் குறிக்கும். இந்த வேர்ச் சொல்லின் அடிப்படையில்உருவாகி இருக்கும் வேறு சில சொற்களையும் பார்ப்போம்.

-------------------------------------------------------------------------------------


மே.............................. = மேன்மை
மேல்.......................... = உயர்வு
மேட்டிமை.............  = மேன்மை
மேதகு....................... = மேன்மையான
மேதாவி.................... = அறிவாளி
மேது..........................  = அறிவு
மேதையர்................ = புலவர்
மேதை....................... =அறிஞன், அறிவு, பேரறிவு, மேன்மை

 

-------------------------------------------------------------------------------------

 

 

பேச்சலர் என்பவர் அறிவில் இளைய நிலையில் உள்ளவர் என்றால் மாஸ்டர்என்பவர் அறிவில்மேன்மைநிலை உடையவர் என்று கொள்ளலாம் அல்லவா ? எனவே மாஸ்டர்என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக மேதைஎன்பதை நாம் ஏற்கலாம். மேதைஎன்றால் அவர்அறிவின் உச்சத்தைத் தொட்டவர் என்று கருத வேண்டியதில்லை. உச்ச நிலை அடைந்தவரை மாமேதைஎன்று அழைக்கலாம் !

 

டாக்டர்என்ற ஆங்கிலச் சொல் தமிழில் முனைவர்என்று சொல்லாக்கம் பெற்றுள்ளது. இதனை நாம்அப்படியே ஏற்கலாம். வாலை”, ”மேதைஎன்ற புதிய சொற்களின் அடிப்படையில் பல்கலைக் கழகப்பட்டங்களைத் தமிழாக்கம் செய்வோமா !

 

-------------------------------------------------------------------------------------



B.A.............=
க.வா (கலை வாலை)
B.Sc............=
அறி. வா (அறிவியல் வாலை)
B.Com.........=
வணி.வா (வணிகவியல் வாலை)
B.Lit............=
இல.வா (இலக்கிய வாலை)
B.B.A..........=
மே.வா (மேலாண்மையியல் வாலை)
B.C.A...........=
க.ப.வா (கணினிப் பயனியல் வாலை)
B.Ed.............=
கல்.வா (கல்வியியல் வாலை)
B.L...............=
ச.வா (சட்டவியல் வாலை)
B.E...............=
பொறி.வா (பொறியியல் வாலை)
B.Tech..........=
நு.வா (நுட்பவியல் வாலை)
B.V.Sc..........=
கா.அறி.வா (கால்நடை அறிவியல் வாலை)
B.S................=
அரி.வா (அரிவியல் வாலை)
B.D.S............=
பல்.அரி.வா (பல் அரிவியல் வாலை)
B.Arc............=
கட்.சி.வா (கட்டடச் சிற்பவியல் வாலை)
B.Mus...........=
இசை.வா (இசையியல் வாலை)
B.Li.S............=
நூ.அறி.வா (நூலக அறிவியல் வாலை)
B.Pharm .......=
மரு. வா (மருந்தியல் வாலை)
M.B...............=
உறை.வா (உறையியல் வாலை)


(SURGERY....=
அரி > அரிதல் >அரிவியல் )
( M.B.B.S.......=
உறை.வா.,அரி.வா )


M.A ..............=
க.மே (கலையியல் மேதை)
M.Sc..............=
அறி.மே (அறிவியல் மேதை)
M.Com......... =
வணி.மே (வணிகவியல் மேதை)
M.Lit..............=
இல.மே (இலக்கிய மேதை)
M.B.A............=
மே.மே (மேலாண்மையியல் மேதை)
M.C.A............=
க.ப.மே (கணினிப் பயனியல் மேதை)
M.Ed..............=
கல்.மே (கல்வியியல் மேதை )
M.L................=
ச.மே (சட்டவியல் மேதை)
M.E................=
பொறி.மே (பொறியியல் மேதை)
M.Tech...........=
நு.மே (நுட்பவியல் மேதை)
M.V.Sc...........=
கா..அறி.மே (கால்நடை அறிவியல் மேதை)
M.S................=
அரி.மே (அரிவியல் மேதை)
M.D ...............=
உறை..மே (உறையியல் மருத்துவ மேதை)
M.D.S.............=
பல்.அரி.மே (பல் அரிவியல் மேதை)
M.Mus............=
இசை.மே (இசையியல் மேதை)
M.LIS.............=
நூ.அறி.மே (நூலக அறிவியல் மேதை)

M.Pharm........ = மரு.மே (மருந்தியல்மேதை)


M.Phil.............=
மெய்.மே (மெய்யியல் மேதை.)
M.Arc..............=
கட்.சி.மே (கட்டடச் சிற்பவியல் மேதை)
Ph.D................=
முனை. (முனைவர்)


=================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda.70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

==================================================

வாலை = BACHELOR
மேதை = MASTER