பாவை.. நீ “ஸ்டீல் பீரோ” (STEEL BUREAU) வாங்கப் போகிறாயா, “ஸ்டீல் கப்போர்டு” (STEEL CUPBOARD) வாங்கப் போகிறாயா அல்லது “ஸ்டீல் அல்மிரா” (ALMIRAH) வாங்கப் போகிறாயா ?
எழில்.....என்ன பாவை ! என்னை இப்படிக் குழப்புகிறாய் ?
பாவை...ஆமாம் எழில் !
“பீரோ” என்றால் இழுவறையுள்ள சாய் தள எழுது மேசை . இதை ”சாய்தள மேசை” என்று சொல்லலாம். ( BUREAU MEANS WRITTING DESK WITH DRAWERS)
”கப்போர்டு” என்பது ”நிலைமாடம்” (CUPBOARD MEANS SHELVED CLOSET OR CABINET FOR CROCKERY,
PROVISIONS etc.)
“வார்டுரோப்” என்பது “ஆடை மாடம்” ( WARDROBE MEANS PLACE WHERE CLOTHES ARE KEPT, esp., LARGE CABINET OR MOVABLE CUPBOARD WITH PEGS, SHELVES Etc.
“ரேக்” என்பது “ நிலையடுக்கு”. (RACK MEANS FIXED OR MOVABLE FRAME OF WOODEN OR METAL BARS FOR HOLDING FODDER, PLATE, HAT, TOOLS, PIPE etc.).
ஆனால், நாம் பீரோ, அல்மிரா, கப்போர்டு என்ற பல பெயர்களால் ஒரே பொருளைத்தான் சொல்கிறோம் !
எழில்...என்ன பாவை ! ஒவ்வொன்றுக்குமிடையே வேறுபாடுகள் உளவா ? சுருக்கமாக அவற்றின் பெயர்களை மீண்டும் சொல்லேன் !
பாவை..பீரோ.................= சாய்தள மேசை
எழில்.....நான் நிலைப்பேழை தான் வாங்க வந்திருக்கிறேன் பாவை ! ஆமாம் மேசை என்பது தமிழ்ச் சொல்லா ?
பாவை...அதிலென்ன ஐயம் ? மேல் + செய்= மேல்செய் > மேசெய் > மேசை. நான்கு காலகளில் நிறுத்தப்பட்டு கிடை வசத்தில் இருக்குமாறு கோக்கப்பட்டுள்ள பலகையின் மேல் வைத்துத் தான் நாம் எழுதுதல், வரைதல், படித்தல் போன்ற பணிகளைச் செய்கிறோம். அதனால் தான் (மேல் செய்) மேசை என்ற பெயர் வந்தது.
எழில்...அப்புறம் ?
பாவை:“சோபா” என்பது ”ஈரணை”. “ஸ்டூல்” என்பது “பாண்டில்”. “டீப்பாய்” என்பது ”தேநீர் பலகை”. போதுமா ?
எழில்.... இன்று இவ்வளவு போதும் ! நீ சென்று வா ! நான் நிலைப்பேழை வாங்கிக் கொண்டு வருகிறேன்.
”உல்” = உள்ளொடுங்கற் கருத்து வேர். (பாவாணரின் வேர்ச் சொற்கட்டுரைகள்.) உள்ளொடுங்கல் = குறிப்பிட்ட வரம்புக்குள் அடங்குதல்.
உல் > உர் .> ஊர் > ஊரி
கல் + ஊரி.... = கல்லூரி
வில் + ஊரி...= வில்லூரி
==================================================
==================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ; 2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
==================================================
ஆடை மாடம் = WARDROBE |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக