விரும்பும் பதிவைத் தேடுக.

இருப்புவழி = RAILWAY. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருப்புவழி = RAILWAY. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (08) இருப்புவழி = RAILWAY.


இருப்பு வழி = RAILWAY 

------------------------------------------------------------------------------------

ரயில்என்ற சொல் நமது ஆடையில் ஒட்டிக் கொண்டுவிட்ட ஒட்டுப் புல். இதை அகற்றவே முடியாதோ என்று ஐயப்படும் அளவுக்கு அது மிக வலிமையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது !

 

ஆமாம்..... ரயில்என்றால் என்ன ? நாம் ஏறிப் பயணம் செய்கிறோமே அந்த வண்டி இயக்கப் படுவதற்கான வழித் தடத்தில் பொருத்தப் பட்டிருக்கும் தண்டவாளத்திற்குத் தான் ரயில்என்று பெயர். வியப்பாக இருக்கிறதா ? உண்மை அது தான். நாம் பயணிக்கும் வண்டிக்குப் பெயர் டிரைன் (Train), ”ரயில்அல்ல !

 

ரயில்வே (Railway) என்றால் என்ன ? தண்டவாளப் பாதை என்று பொருள். இந்தத் தண்டவாளப் பாதையில் பயணிகள் வண்டியும் செல்லும்; சரக்கு வண்டியும் செல்லும். ஆய்வு ஊர்தியும் (Trolly) செல்லும். அதனால் தான் வண்டியை மையமாக வைத்துப் பெயரிடாமல், பாதையை மையமாக வைத்து இருப்புப் பாதை (Railway) என்று பெயரிடப் பட்டுள்ளது !


 

ரயில்வே என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் ? ”தண்டவாளப் பாதைஎன்பது நேரடி மொழி பெயர்ப்புச் சொல். தண்டவாளம் இரும்பினால் ஆனது என்பதால் இரும்புப் பாதைஎன்று சுருக்கமாகச் சொல்லலாம். இலக்கணப்படி இரும்பு + பாதை = இருப்புப் பாதை என்று தான் சொல்ல வேண்டும் !

 

வே(Way) என்பதை பாதை என்றும் சொல்லலாம்; வழி என்றும் சொல்லலாம். எனவே ரயில்வேஎன்பதைச் சுருக்கமாக இருப்பு வழிஎன்று சொல்வது பொருத்தமாக இருக்கும் !

 

பஸ் என்பதைப் போல ரயில்என்பதும் மக்களிடையே பேச்சு வழக்கில் நிலை பெற்று விட்ட ஒரு சொல். இதை மாற்றுவது எளிதன்று. ஆனால், எழுத்தில் வரும்போது ரயில்வேஎன்பதற்குப் பதில் இருப்பு வழிஎன்பதைப் பயன்படுத்தலாம் அல்லவா ?

 

இருப்பு வழிஎன்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும், தொடர்புடைய ஏனைய சொற்களையும் பார்ப்போமா !

 

=================================================

RAILWAY......................................= இருப்பு வழி

RAILWAY TRACK........................................= இருப்பு வழித் தடம்

RAILWAY LINE............................= இருப்புப் பாட்டை

RAILWAY SIGNAL.......................= இருப்பு வழிக் குறி

RAILWAY STATION.....................= இருப்பு வழி நிலையம்

RAILWAY STATION MASTER......= நிலைய மேலாளர்

BROAD GAUGE LINE...................= அகல் வழிப் பாதை

METER GAUGE LINE...................= இடை வழிப் பாதை

NARROW GAUGE LINE...............= குறு வழிப் பாதை

PLATFORM..................................= நடை வழி

PLATFORM TICKET.....................= நடைவழிச் சீட்டு

TICKET COUNTER.......................= சீட்டு மாடம்

SEASON TICKET.............. ...........= பருவச் சீட்டு

RAILWAY DEPARTMENT............= இருப்பு வழித் துறை

RAILWAY EMPLOYEE...... ..........= இருப்பு வழி ஊழியர்

TRAIN.........................................= இருப்பூர்தி

GOODS TRAIN............................= சரக்கூர்தி

PASSENGER TRAIN....................= பயணர் ஊர்தி

EXPRESS TRAIN.........................= விரைவூர்தி

SUPER FAST EXPRESS...............= கதிப்பூர்தி

TICKET RESERVATION..............= சீட்டு முன் பதிவு

“TATKAL” RESERVATION..........= முந்துறு முன்பதிவு

RAILWAY GATE..........................= வழிக் கடவை

RAILWAY OVER BRIDGE...........= இருப்புவழி மேம்பாலம்

RAILWAY CANTEEN...................= இருப்பு வழி அங்காடி

==================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ.

[தி.ஆ: 2052, நளி (கார்த்திகை) 19]

{05-12-2021}

=================================================

 இருப்புவழி = RAILWAY.