அருகலை = WI - FI
--------------------------------------------------------------------------------------
வை—பை என்பது ”அல்லிழை வலை நுட்பம் ”(WIRELESS NETWORKING
TECHNOLOGY) ஆகும்.
அல்லிழை என்றால்
என்னவென்ற ஐயம் உங்களுக்கு தோன்றலாம். அல் + இழை = அல்லிழை. “இழை இல்லாத” என்று பொருள்.இழை என்பது
கம்பியைக் குறிக்கும் சொல். பருமனாக இருந்தால் ”கம்பி” என்போம். மெல்லிதாக இருந்தால் “இழை” என்று சொல்வதே பொருத்தம்.
இவ்விடத்தில் “அல்லிழை” என்ற சொல்லை “அல் வழிப் புணர்ச்சி”, “அன்மொழித் தொகை”, “அல்லுழி”, “அல்வழக்கு” ஆகிய சொற்களுடன்
ஒப்புநோக்கிப் பார்த்திடுக !
அல் = வறுமை = வெறுமை =
ஒன்றுமின்மை. ”அல்” என்னும் சொல்லுக்கு “அல்லாத” என்ற பொருளுடன் “ஒன்றும் இல்லாத”, சுருக்கமாக “இல்லாத” என்ற பொருளும் உண்டு
என்பதை உன்னித்துணர்க !
இந்த வை-பை நுட்பம்
வானலையைப் (RADIO
FREQUENCY) பயன்படுத்தி மிகு விரை இணைய தளம் (HIGH SPEED INTERNET) மற்றும் வலைத் தள (HIGH SPEED NETWORK) வசதிகளை அளிக்கிறது.
( Wi-Fi is the name of
a popular wireless networking technology that uses radio waves to provide
wireless high-speed internet and network connections.)
வை – பை அல்லயன்ஸ் என்ற
நிறுவனம் ”வை-பை” என்ற சொல்லைத் தனது
வணிகக் குறியீட்டுச் சொல்லாக வைத்திருக்கிறது.
(The Wi-Fi Alliance,
owns the Wi-Fi registered trade mark)
இந்த வணிகக் குறியீட்டுச்
சொல்லிலிருந்து உருவான பெயர்தான் “வை-பை” என்பது.வை–பை அல்லயன்சு நிறுவனம் “வை–பை” என்பதை “அல்லிழைச் சிற்றிட வலைத் தள விளைவுகள்” (WIRELESS LOCAL AREA
NETWORK PRODUCTS ) என்று வரையறை செய்கிறது. சிற்றிடம் = குறுந்தொலைவு = LOCAL AREA
The Wi-Fi Alliance,
the organisation that owns the Wi-Fi registered Trade Mark term specifically
defines Wi-Fi as “wireless local area network (WLAN) products “ )
நாம் இதைச் சுருக்கமாக “அல்லிழை விளைவு” (WIRELESS PRODUCTS) என்று அழைக்கலாம். இதையே
இன்னும் சுருக்கி “அல்விளை” என்று சொல்லலாம். ”வை-பை” என்பதை இனி “அல்விளை” என்று அழைப்போமே !
சென்னப்ப நாயக்கர்
பட்டினம் “சென்னை” ஆனதைப் போல, ”திருச்சி” என்ற பெயர்
திருச்சிராப்பள்ளியிலிருந்து உருவானதைப் போல “அல்லிழைச் சிற்றிட வலைத் தள விளைவுகள்” என்பது “அல்லிழை விளைவு” என்று சுருங்கி, “அல்விளை” என்று நிலை பெறட்டும் !
”வை-பை” என்ற புதிர்ச் சொல்லுக்கு
“அல்விளை” என்ற புதுப் பெயரைச்
சூட்டுவோம்! தமிழுக்கு அணி சேர்ப்போம் ! வாரீர் !!
=========================================================
Wi - Fi |
|
Wi - Fi Router |
= அல்விளை அளியம் |
Wi - Fi Hot Spot |
= அல்விளை முனையம் |
Wi - Fi Connection |
= அல்விளை இணைப்பு |
Wi - Fi Soft ware |
= அல்விளை மென்பொருள் |
Wireless |
= அல்லிழை |
==================================================
பின்குறிப்பு:
சிங்கப்பூர் (சிங்கை) தமிழறிஞர்கள் பல புதிய
சொற்களை உருவாக்கித் தமிழுக்கு அளித்துள்ளனர். அவற்றுள் ஒன்று Wi-Fi = அருகலை.
கம்பி இணைப்பு இல்லாமல் சிறு தொலைவுக்கு செல்கின்ற
வானலை ((RADIO FREQUENCY) என்னும் பொருளில் அருகு +
அலை = அருகலை என்று உருவாக்கி உள்ளனர். அதை நாமும் ஏற்றுப் பயன்படுத்துவோம்.
===================================================
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 03]
{18-12-2021}
==================================================
அல்-விளை = Wi-Fi |
அருகலை அளியம் = Wi - Fi Router |