விரும்பும் பதிவைத் தேடுக.

பாவையுருளி=SCOOTY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாவையுருளி=SCOOTY லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (26) பேடுருளி = MOPED.

பேடுருளி = MOPED

--------------------------------------------------------------------------------------

 

முற்காலத்தில் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல, மாட்டு வண்டியை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர், பின்பு சைக்கிள்பயன்பாட்டுக்கு வந்தது. இதே காலகட்டத்தில் மோட்டார் சைக்கிளும்அறிமுகம் ஆயிற்று. ஆனால் இதன் விலை, வசதி படைத்தோர் மட்டுமே வாங்கக் கூடிய அளவுக்கு மிகுதியாக இருந்தது. 

 

எனவே, எல்லா மக்களும் வாங்கக்கூடிய விலையில் ஒரு வண்டியை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. 

 

இதனால் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு சுவேகாஎன்னும் மொபெட்அறிமுகம் ஆயிற்று. 


 

இன்றைய நிலையில் மோட்டார் சைக்கிள்ஸ்கூட்டர்”, “மொபெட்”, “”ஸ்கூட்டிஎன்று பல வகையான வண்டிகள் சாலையில் ஓடுவதைப் பார்க்கிறோம்.

 

சாலையில் மிகுதியாக ஓடக்கூடிய மொபெட்வண்டியைத் தமிழில் எவ்வாறு அழைப்பது

 

இதற்குப் பொருத்தமான சொல் இன்னும் அறிமுகம் ஆகவில்லை.

 

MOTORISED PEDALING VEHICLE” என்பதன் சுருக்கமே “MOPED” ஆகும். இந்த வண்டி மோட்டார்விசையிலும் ஓடும். தேவைப்பட்டால், “பெடலிங்செய்தும் ஓட்டலாம். 

 

இதில் மோட்டார்” “பெடல்இரண்டும் இருப்பதால், இதை மோட்டார் சைக்கிள்வகையிலும் சேர்க்க முடியாது. சைக்கிள்வகையிலும் சேர்க்க முடியாது.

 

"திருநங்கை இனத்தை ஆண்என்றோ பெண்என்றோ குறிப்பிடுவது இல்லை. இரண்டு இனங்களின் சாயலும் இருப்பதால் இவர்களை அலிஎன்று முன்பு சொல்லி வந்தோம். 

 

பிற்காலத்தில், அவர்களும் மனிதர்களே, அவர்களைக் கவுரவமாக நடத்த வேண்டும் என்ற உயர்வான எண்ணத்தில் அரவாணிஅல்லது திருநங்கைஎன்னும் பெயர்களால் குறிப்பிட்டு வருகிறோம்.

 

மொபெட் வண்டியும் இவர்களைப் போன்றதே. மோட்டார்விசையில் ஓடும் மோட்டார் சைக்கிள்சாயலும் இதில் உண்டு. பெடல்செய்து ஓட்டுவதால் சைக்கிள்சாயலும் இதில் உண்டு. 

 

இவ்வாறு இரண்டு இனங்களின் சாயலுள்ள உயிரினங்களுக்கு 

 

பேடுஎன்று தமிழில் பெயர். 

 

சக்கரம் என்றால் உருளிஎன்று பொருள். பேடுஅமைப்பு உடைய சக்கரங்கள்இணைத்த வண்டியை பேடு + உருளி = பேடுருளிஎன்னும் பெயரால் இனி அழைப்போமே !

 

மொபெட் என்னும் சொல்லை முற்றாகத் துறப்போம். இனி பேடுருளிநம் எழுத்திலும், நாவிலும் இன்னிசை கூட்டி நடனமாடட்டும் !

 

==================================================


MOPED

= பேடுருளி

MOTOR CYCLE

= உந்துருளி

SCOOTER

= துள்ளுருளி

SCOOTY

= பாவையுருளி

 

==================================================


ஸ்கூட்டர்சக்கரம் மிகச் சிறியதாக இருப்பதால், ஓட்டுகையில் துள்ளல்அதிகம் இருக்கும். எனவே இது துள்ளுருளி”. “ஸ்கூட்டிபாவையர் எளிதாக ஓட்டிச் செல்ல வசதியாக வடிவமைக்கப் பட்டிருப்பதால், இது பாவையுருளி

 

===================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 02]

{17-12-2021}

==================================================

பேடுருளி = MOPED.