ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

கடைபொறி = LATHE PARTS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடைபொறி = LATHE PARTS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (27) கடைசற் பொறி உறுப்புகள் = LATHE PARTS.

கடைசற் பொறி உறுப்புகள் = LATHE PARTS

--------------------------------------------------------------------------------------

 

பணிமனைகளில் கடைசற் பொறியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மாழை உருளைகளை (Metal Round Rods) வைத்து பல வகையான பொருள்களை இங்கு தயாரிக்கிறார்கள்.

 

ஊன்றாணி (Bolt) சுரை (Nut) ஆகியவை செய்திடவும், மரை வெட்டிடவும் (Thread Cutting) கடைசற் பொறிகளே பயன்படுகின்றன.

 

பண்டைத் தமிழர்கள் கடைசற் பொறியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்

 

கோடு போழ் கடைநரும், திருமணி குயினரும்.......என்னும் மதுரைக் காஞ்சி பாடல் வரிகள் மூலம் இது உறுதிப்படுகிறது (பாடல் வரி. 511).

 

இக்காலத்தில் மின் மூலம் இயக்கப்படும் கடைசற் பொறி, பண்டைக் காலத்தில் மனித ஆற்றல் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம்.


 

கடைசல் என்றால் என்ன ?கடைசற்பொறியின் ஒர் உறுப்பான சிமிழியில் (Chuck) மாழைத் துண்டு (Metal piece)கிடைவசத்தில்(Horizontal position) பிடிக்கப்பட்டு இருக்கும். 

 

சிமிழியும் மாழைத் துண்டும் இடஞ் சுற்றாக [Anti-clockwise] மின் விசையால் சுழற்றப்படுகையில் உளிக்கம்பையில் (Toolpost) பொருத்தப்பட்டிருக்கும் கடைவு உளியானது (Turning Tool) மாழைத் துண்டினைத் துருவும். 

 

அதில் குழைவுகள் ஏற்படுத்திக் குறிப்பிட்ட வடிவத்திற்குக் கொண்டு வரும். இதுவே கடைசல் எனப்படும்.

 

கடைசற் பொறியானது, இயக்கத்திலும், வடிவிலும், பயன்பாட்டிலும் காலந்தோறும் மாறுதலுக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. 

 

என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடைசற் பொறியுடன் இணைந்த கணினியில் கட்டளை நிரல்களை உள்ளீடு செய்துவிட்டால், எல்லாப் பணிகளையும் தானே செய்து முடிக்கும் திறனுள்ள பொறிகள் இக்காலத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

 

இத்தகைய பயன்பாடு மிக்க பொறியை ஆங்கிலத்தில் லேத் என்றும் தமிழில் கடைசற் பொறி என்றும் சொல்கிறோம். கடைசற் பொறியில் பல்வேறு உறுப்புகள் உள்ளன. அவற்றின் தமிழ்ப் பெயர்களைத் தெரிந்து கொள்வோமா !

 

===================================================

 

LATHE

கடைசற் பொறி

CNC LATHE

கணினி இயக்க கடைசற் பொறி

LATHE BED

தளிமம்

HEAD STOCK

நிலை மத்தகம்

TAIL STOCK

இயங்கு மத்தகம்

SADDLE

சேணம்

CARRIAGE

பண்டியம்

APRON

உளிப் பெட்டகம்

LEAD SCREW

நடவைத் திருகு

FEED ROD

ஊட்டத் தண்டு

TOOL POST

உளிக் கம்பை

CROSS SLIDE

ஊட்டக் கலிகை

COMPOUND REST

சேர் மணை

SWIVEL BASE

சுழல் இருக்கை

TILTING WEDGE

சரிப்புத் தட்டு

SPEED GEAR

கடுக்கப் பல்லி

FEED GEAR

ஊட்டப் பல்லி

SPINDLE

ஊடச்சு

BACK PLATE

பின் தட்டு

FACE PLATE

முன் தட்டு

DOG CHUCK

ஞாளிச் சிமிழி

TRUE CHUCK

மையச் சிமிழி

LATHE DOG

கடைசல் ஞாளி

LATHE CENTER

கடைசல் நள்ளி

DEAD CENTER

நிலை நள்ளி

LIVE CENTER

இயங்கு நள்ளி

PINION

சிறகுப் பல்லி

RAKE

பற்சட்டம்

REVERSIBLE SWITCH

இடவல ஆளி

 

=================================================== 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 02]

{17-12-2021}

===================================================

கடைசற் பொறி = LATHE.