ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (50) துயிலி = NIGHTY.

 

துயிலி = NIGHTY

-----------------------------------------------------------------------------------------

 

மகளிருக்கான ஆடைகள் பலவுள்ளன ! அவற்றுள் முதன்மை இடம் வகிப்பது சேலைபண்டைக் காலத்தில் வழங்கி வந்த “சீரை” என்ற சொல்லே இக்காலத்தில் “சீலை” என்றும் “சேலை” என்றும் வழங்கப் பெறுகின்றன. “சேலையைப் “புடைவை” என்றும் அழைக்கிறோம் !

 

மகளிரின் பிற ஆடை வகைகளுள் ”நைட்டி” (NIGHTY) என்பதும் ஒன்று ! இரவில் துயிலறையில் அணிந்து கொள்வதற்காக இது உருவாக்கப் பெற்றதுஇறுக்கமின்றித் தளர்வாக இருக்கும் இவ்வாடையை மகளிர் பகல் நேரத்திலும் அணிந்து கொள்வதைப் பார்க்கிறோம் !

 

துயிலறையில் அணிந்து கொள்வதற்காகத் தோன்றியுள்ள  இந்த ஆடையைத் “துயிலி” என்று அழைப்போமே ! ”துயிலி” என்பதற்குத் தமிழ் அகரமுதலி  சொல்லும் பொருள் “ஒரு வகை ஆடை” என்பதே !

 

எனவே, இனி நாம் NIGHTY என்று சொல்லாமல் “துயிலி” என்றே சொல்லிப் பழகுவோம் !

---------------------------------------------------------------------------------------------

                                              NIGHTY = துயிலி

--------------------------------------------------------------------------------------------

--------------------------------------------------------------------------------------------

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி. : 2052 : சிலை (மார்கழி) 04]

{19-12-2021}

 

---------------------------------------------------------------------------------------------

துயிலி = NIGHTY.


 

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (49) பகரவூசி = STAPLE PIN


பகரவூசி - STAPLE PIN

-------------------------------------------------------------------------------------




புத்தகங்கள் தைப்பதற்கு ஊசிநூல் உதவுகிறது. கோப்புத் தாள்களைப் பிணைத்து வைக்க அலுவலகங்களில் கூர் நாடா (TAG) பயன் படுகிறது. துணியில் தையல் வேலை செய்வதற்கு தனியாக ஊசிகள் உள்ளன. தையல் ஊசி, குண்டூசி, வார்த்தாரை ஊசி, கொண்டைஊசி , கோணி ஊசி எனவும் பல்வகை ஊசிகள் பயன்பாட்டிலுள்ளன !



அளகைகளிலும் (BANKS) அலுவலகங்களிலும் தாள்களைப் பிணைத்திட STAPLE PIN பயன்படுகிறது ! STAPLE PIN என்பது வடிவம் உள்ள பிணையூசி ! இதன் வடிவத்தை வைத்து STAPLE PIN என்பதைப் பகரவூசிஎன்று சொல்லாக்கம் செய்யலாம் !



பகரவூசி
யைக் குத்தித் தாள்களைப் பிணைப்பதற்குச் சிறு கருவி ஒன்று பயன்படுகிறது. இந்தக் கருவிக்கு STAPLER என்று பெயர். பகரஊசியைக் குத்தித் தாள்களைப் பிணிக்க இஃது உதவுவதால் STAPLER கருவியைப் பகரப் பிணிகைஎன்று கூறலாம்.





----------------------------------------------------------------------------



             STAPLER...............=பிணிகை ( பகரப்பிணிகை)

                 STAPLE PIN..........= பகர ஊசி




-----------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.: 2052 : சிலை (மார்கழி) 04]

{19-12-2021}

--------------------------------------------------------------------------------------

பகரங்குத்தி = STAPLER

பகரவூசி = STAPLE PIN


புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (48) ஒளிவிளக்குகள் = LAMPS

 

ஒளிவிளக்குகள் = LAMPS

--------------------------------------------------------------------------------------------

 

இப்பூவுலகில்பகலில் இருளை விலக்கி ஒளியை ஊட்டுவது கதிரவன்இரவில் மையிருளைத் துடைத்தெறிந்து தெருக்களிலும் வீடுகளிலும் ஒளிவெள்ளம் பாய்ச்சுவது விளக்கு !

 

பண்டைக் காலம் முதல் அண்மைக் காலம் வரைவிளக்குகளின் படிமுறை வளர்ச்சி வியக்கத்தக்க முறையில் விரிவடைந்துள்ளது. நாகரிக வளர்ச்சி அடிநிலையில் இருந்த காலத்தில் மனிதன் எரியும் மரக் கொம்புகளை (WOODEN TORCH) விளக்குகளாகப் பயன்படுத்தி வந்தான் !

 

அடுத்துமரக் கொம்பில் துணி சுற்றிஅதில் எண்ணெய் விட்டுக் கொளுத்திதீப்பந்தம் (OIL TORCH) என்ற பெயரில் விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன.  இவற்றை,  மனிதன் செல்லுமிடமெல்லாம் கையில் எடுத்துச் செல்லவும் வசதியாக இருந்தது  !

 

வீடுகள் அமைத்து வாழத் தொடங்கிய பின்பு,  தீப்பந்தங்கள்வீட்டினுள் பயன்படுத்தக் கூடியதாக இல்லை.  எனவேசிறிய மண்சட்டிகளில் எண்ணெய் ஊற்றித் திரியிட்டு சுடர் ஏற்றி எரியவிடும் அகல் விளக்குகள் (EARTHEN LAMP)  பயன்பாட்டுக்கு வந்தன !

 

அகல் விளக்குகளுடன்பித்தளை விளக்குகளும்  (BRASS LAMPS) இல்லங்களில் இடம் பிடித்தனஇதன் வளர்ச்சியின் ஒரு வடிவமாகஐந்து முகக் குத்து விளக்குகள் (STANDING BRASS LAMPS) தோன்றின !

 

காலப் போக்கில்மண்ணெண்ணெய் விளக்குகள் (KEROSENE LAMPS) பரவலாக இடம் பிடித்தனபின்மாலைப் பொழுதில் காய்கனிகள்துணிகள் போன்றவற்றை தெருவோரங்களில் பரப்பி விற்பனை செய்யும் சிறு வணிகர்கள்  காடவிளக்கு  (காண்டா விளக்குஎனப்படும்  மண்ணெண்ணெய்  விளக்குகளைப் பயன்படுத்தினர் !

 

வீடுகளில் சிமிளி விளக்குகளும்,  கூண்டு விளக்குகளும் (HURRICANE  LAMP)  பயன்பாட்டில் இருந்தனதுயிலறைகளில் சுவரொட்டி விளக்குகள் (BED ROOM LIGHT) இடம் பெற்றன !

 

அறிவியல் புரட்சியின் காரணமாக தாமசு ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்விளக்குகள் உலகெங்கும் இருளைப் போக்கி ஒளியூட்டும் உன்னத  முயற்சிக்கு உறுதுணையாக விளங்கின !

 

மின் விளக்குகளில் தான் எத்துணை வகைகள் !  எத்துணை வடிவங்கள் ! எத்துணை வண்ணங்கள் !

 

குமிழ் விளக்குகள்  (BULBS)  வெப்பத்தின் விளைவால் ஒளியுமிழ்பவை.   இவை  கனலியல் குமிழ் விளக்கு  (INCANDESCENT  ELECTRIC BULBS)   என்று அழைக்கப் பெற்றனஇவ்விளக்குகள் ஒளியை உமிழ்ந்ததுடன்,  சிறிய அளவில் வெப்பத்தையும் வெளிப்படுத்தின !

 

கண்களுக்குக் குளிர்ச்சியானஒளியுமிழ் விளக்குகள் அடுத்து கண்டுபிடிக்கப்பட்டன.  இரண்டு அடி மற்றும் நான்கு அடி நீளத்தில் வாழைத் தண்டு வடிவத்தில் உருவாக்கப்பெற்ற இவ்விளக்குகள் ஒளிரியல் குழல் விளக்கு (FLUORESCENT TUBE LAMP)  என அழைக்கப் பெற்றன !

 

இருபக்கமும் மூடியகுழல் போன்ற அமைப்புடைய இவ்விளக்குகளின் உட்புறத்தில் பூசப்பெற்றிருக்கும்   வேதிப் பொடி  (CHEMICAL POWDER)   வழியாக மின்சாரம் பாயும் போதுஅப்பொடி ஒளிரத் தொடங்கும்ஆனால் வெப்பம் உருவாகாது !

 

ஒளிரியல் குழல்விளக்குகள் பயன்பாட்டில் இருந்த அதே நேரத்தில்தெரு விளக்குப் பயன்பாட்டின் பொருட்டு  இதள் ஆவி விளக்குகளும் (MERCURY VAPOUR LAMPS), உவரிய ஆவி விளக்குகளும் (SODIUM VAPOUR LAMPS) புழக்கத்திற்கு வந்தன!

 

வணிக நிறுவனங்களின் பெயரை விளம்பும் குறி விளக்குகள்  (SIGN LAMPS)  பல்வேறு மொழி எழுத்து வடிவங்களிலும்,  பல்வேறு வண்ணங்களிலும் புழக்கத்திற்கு வந்தன !

 

நியான் வளி  (NEON GAS) சிறிது நிரப்பப் பெற்ற குறிவிளக்கு  சிவப்பு  நிறத்தில்  ஒளியுமிழும்.  ஆர்கான் வளி (ORGAN GAS)  நிரப்பிய குறி விளக்கு  நீலநிறத்தில்  ஒளியுமிழும் !

 

குறுங் குழல் விளக்குகள் (COMPACT FLUORESCENT LAMPS) Or (C.F.L) அடுத்து புழக்கத்திற்கு வந்தனஇவ்விளக்குகளில் ஒரு துளியளவு இதள்  (MERCURY)  நிரப்பப் பட்டிருக்கும்இவ்விளக்குகள்பெருமளவு மின்சாரச் செலவைக் குறைப்பதாக  இருந்தாலும்,  அதில் உள்ள இதள்  (MERCURY)  நச்சுத் தன்மை உடையதால்மாற்று விளக்கு கண்டுபிடிக்க முனையலாயினர் !

 

இம்முயற்சியின் விளைவு தான் L.E.D LAMP அறிமுகம்மின்மப் பொருள்களில் DIODE என்று ஒன்று உண்டுஇந்த DIODE வழியாக மின்சாரம் செல்லும் போதுஅது ஒளிர்கிறது இவ்வாறு ஒளிர்வதால் ஏற்படும் வெளிச்சத்தில் வெப்பம் முகிழ்ப்பதில்லை !

 

பல DIODE-கள் ஒரே கொத்தாக அமைந்து ஒரே நேரத்தில் ஒளிரும்போதுஒளிவெள்ளம் (பேரொளிகிடைக்கிறதுஇதில் முதன்மையான ஒரு செய்திஇவ்விளக்குகளைப் பயன்படுத்தும் போது மின்செலவு மிக மிகக் குறைகிறதுசுற்றுச் சூழலுக்கும் கேடு ஏற்படுவதில்லை.

 

L.E.D. விளக்கினைத் தமிழில் மணி விளக்கு என அழைக்கலாம்சிறு மணி போன்ற பொருள் ஒளிர்ந்து ஒளி தருவதால் ”மணிவிளக்கு”.

.

                -------------------------------------------------------------------------------

                விளக்கு (LAMP) தொடர்பான கலைச்சொற்கள்

                -------------------------------------------------------------------------------

 

               BED ROOM LIGHT.......................= சுவரொட்டி விளக்கு

               BRASS LAMP..................................= பித்தளை விளக்கு

               COMPACT FLUORESCENT LAMP = குறுங்குழல் விளக்கு

               EARTHEN LAMP.............................= அகல் விளக்கு

               HURRICANE LAMP........................= கூண்டு விளக்கு.

               L.E.D.LAMP.......................................= மணிவிளக்கு

               MERCURY LAMP.............................= இதள் விளக்கு

               NEON SIGN LAMP............................= செங்குறி விளக்கு

               ORGAN SIGN LAMP.........................= நீன்குறி விளக்கு

               SEARCH LIGHT.................................= சுழல்விளக்கு

               SERIAL SET CHORD.........................= சரவிளக்கு

               SODIUM LAMP...................................= பொன்மை விளக்கு

               STANDING LAMP...............................= குத்து விளக்கு

               TORCH LIGHT....................................= தடவிளக்கு

            FLUORESCENT TUBE LAMP.........= ஒளிரியல் குழல் விளக்கு

            INCANDESCENT ELECTRIC BULB = கனலியல் குமிழ் விளக்கு

 

----------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.:2052 : சிலை (மார்கழி) 04]

{19-12-2021}

--------------------------------------------------------------------------------------------

பல்வகை விளக்குகள் = DIFFERENT LAMPS

கூண்டு விளக்கு = HURRICANE LAMP