பகரவூசி - STAPLE
PIN
-------------------------------------------------------------------------------------
புத்தகங்கள் தைப்பதற்கு ஊசிநூல் உதவுகிறது. கோப்புத் தாள்களைப் பிணைத்து வைக்க அலுவலகங்களில் கூர் நாடா (TAG) பயன் படுகிறது. துணியில் தையல் வேலை செய்வதற்கு தனியாக ஊசிகள் உள்ளன. தையல் ஊசி, குண்டூசி, வார்த்தாரை ஊசி, கொண்டைஊசி , கோணி ஊசி எனவும் பல்வகை ஊசிகள் பயன்பாட்டிலுள்ளன !
அளகைகளிலும் (BANKS) அலுவலகங்களிலும் தாள்களைப் பிணைத்திட STAPLE PIN பயன்படுகிறது ! STAPLE PIN என்பது ”ப” வடிவம் உள்ள பிணையூசி ! இதன் வடிவத்தை வைத்து STAPLE PIN என்பதைப் “பகரவூசி” என்று சொல்லாக்கம் செய்யலாம் !
“பகரவூசி”யைக் குத்தித் தாள்களைப் பிணைப்பதற்குச் சிறு கருவி ஒன்று பயன்படுகிறது. இந்தக் கருவிக்கு STAPLER என்று பெயர். “பகர” ஊசியைக் குத்தித் தாள்களைப் பிணிக்க இஃது உதவுவதால் STAPLER கருவியைப் “பகரப் பிணிகை” என்று கூறலாம்.
----------------------------------------------------------------------------
STAPLER...............=பிணிகை ( பகரப்பிணிகை)
STAPLE PIN..........= பகர ஊசி
-----------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்’
"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 04]
{19-12-2021}
--------------------------------------------------------------------------------------
பகரங்குத்தி = STAPLER |
பகரவூசி = STAPLE PIN |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக