விரும்பும் பதிவைத் தேடுக.

ஈர்மம் = PAINT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈர்மம் = PAINT லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (21) ஈர்மம் = PAINT.

ஈர்மம் = PAINT

---------------------------------------------------------------------------------------------

 

ஒரு கட்டடத்துக்கோ (BUILDING) அல்லது அறைகலன் போன்ற (FURNITURES) தளவாடங்களுக்கோ பெயிண்ட்அடித்தால், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. மனதுக்கு இனிமையாக இருக்கிறது !

 

"பெயிண்ட்டில் உள்ள நெய்ப்புத் தன்மை, பூசு தளத்தில் சீராகப் பரவி,  இறுகி, தண்ணீரை, ஊடுருவி உள்ளே செல்ல விடாமல் தடுக்கிறது. கறையோ, துருவோ படியாமல் காப்புக் கவசமாகத் திகழ்கிறது !


 

பெயிண்ட்டுக்குத் தமிழில் என்ன பெயரிட முடியும் ? “வண்ணப் பூச்சுஎன்பது நீண்ட சொல். வண்ணக் கலவைஎன்பதும் நீண்ட சொல்லே ! வண்ணப் பூச்சு”, “வண்ணக் கலவைஎன்ற சொற்களின் அடிப்படையில் தொடர்புடைய பிற சொற்களை உருவாக்குவதும் கடினமான பணியாக உள்ளது !

 

புதிய சொல் ஒன்று உருவாக்கினால் நலமாக இருக்கும் அல்லவா ?

 

தமிழில் ஈர்என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் நெய்ப்பு”, ”குளிர்ச்சி”, “இனிமை” “கவர்ந்து இழுத்தல்என்ற பொருள்களும் உள்ளன ! 

 

நெய்ப்புஎன்றால், ”பள பளப்புஎன்றும் பொருள் சொல்கிறது தமிழ் அகராதி. பெயிண்ட்டுக்கு இந்த எல்லாக் குணங்களுமே உள்ளன. இத்தகைய குணங்களுடைய பெயிண்ட்டைஈர்மம்” (ஈர்+ம்+அம்=ஈர்மம்) என்று ஏன் சொல்லக் கூடாது

 

ஈர்மம்என்ற சொல் வடிவில் சிறியது. பொருளில் ஆழ்மை உடையது. ஒலிப்பதில் இனிமை உடையது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்

 

ஈர்மம்என்ற சொல்லினை வைத்து உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போமா ?

 

==================================================


PAINT

= ஈர்மம்

PAINTER

= ஈர்மர்

PAINTING

= ஈர்மை

PAINTING BRUSH

= ஈர்மைத் தூரிகை

RED PAINT

= சிவப்பு ஈர்மம்

PAINT DEALERS

= ஈர்ம வணிகர்

PAINT MANUFACTURER

= ஈர்ம வனைவர்

PAINT FACTORY

= ஈர்ம ஆலை

PAINT COATING 

= ஈர்மப் பூச்சு

 

=====================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: சிலை (மார்கழி) 02]

{17-12-2021 

=======================================================

 ஈர்மம் = PAINT.