அழலி = IRON BOX
--------------------------------------------------------------------------------------
இஸ்திரிப் பெட்டி என்று
சொல்லப்படும் ஆடைகள் தேய்ப்புப் பெட்டியில் இரண்டு வகையுண்டு.. அந்தக் காலத்தில்
சலவைத் தொழிலாளிகள் பயன்படுத்திய இஸ்திரிப் பெட்டிகள் பித்தளையால் ஆனவை !
இதில் வெப்பமூட்டுவதற்குக் கரி பயன்படுத்தப் பட்டது. பிற்காலத்தில் மின்விசை பயன்பாட்டுக்கு வந்த பின்பு தயாரிக்கப் பெற்ற இஸ்திரிப் பெட்டிகள் துருப் பிடிக்காத இரும்பினால் செய்யப் பெற்றவையாக இருந்தன !
இஸ்திரிப் பெட்டியின் அடிப்பாகம் கனமான மாழைத் தகட்டினால் ( Metal Bottom) ஆனது. இந்த அடிப்பாகம் நெருப்பினாலோ அல்லது மின் விசையினாலோ வெப்பமூட்டப் படும்போது, அது கணிசமான அளவுக்குச் சூடேறுகிறது !
சுருக்கங்கள் உள்ள துணி
சற்று ஈரமாக்கப் பட்டு, அதன் மேல் இஸ்திரிப் பெட்டியை வைத்து முன்னும் பின்னும் இழுத்துத்
தேய்க்கும்போது,
துணியில் உள்ள
சுருக்கங்கள் நீங்கி துணி விறைப்பாகக் காணப்படும் !
எந்த வகை இஸ்திரிப் பெட்டியானாலும், அதைப் பயன்படுத்துவதற்கு வெப்பம் தேவை. வெப்பம் எங்கிருந்து உண்டாகிறது ? வெப்பத்தின் மூலவடிவம் அழல். அழலில் இருந்துதான் உண்ணம் (உஷ்ணம்) பிறக்கிறது !
அழல் என்பதற்கு நெருப்பு, வெப்பம், தீக்கொழுந்து, எரிவு, கொதிப்பு என்றெல்லாம் பொருள் சொல்லப்படுகிறது. அழல் இருக்குமிடத்தில் வெப்பம் இருக்கும். இரண்டும் இரட்டைப் பிறவிகள் !
கரியினாலோ அல்லது மின் விசையினாலோ இஸ்திரிப் பெட்டி வெப்பமூட்டப் படும்போது அதற்கு மூலதாரமாக அங்கு அமைவது அழல். அழலின் பயனால் இயக்கப் படும் பெட்டியை அழலிப் பெட்டி என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் அல்லவா ?
இனி இஸ்திரியைத் தூக்கிப் பரண் மீது வைத்துவிட்டு அழலியைக் கையில் எடுப்போம். ”அழலி” என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பாருங்களேன் !
==================================================
IRON BOX |
= அழலி |
ELECTRIC IRON BOX |
= மின்னழலி |
CHARCOAL IRON BOX | = கரியழலி |
STEAM IRON BOX |
=ஆவியழலி |
===================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052: சிலை (மார்கழி) 01]
{16-12-2021}
===================================================
அழலி = IRON BOX. |