ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (20) பயின் = RUBBER.


பயின் = RUBBER.

-------------------------------------------------------------------------------------

 

ஆலமரம், அத்தி மரம், கருவேல மரம், முருங்கை மரம் போன்ற மரங்களிலிருந்து பால் அல்லது சாறு வடியும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப் பால் உலர்ந்து கெட்டியாகி பிசின்கிடைக்கிறது ! 

 

அது போலவே இரப்பர் மரத்தின் பட்டையிலிருந்து வடியும் பால், உலர்ந்தால் கெட்டியாகி பிசின்ஆகிறது !

 

தோட்டங்களில் வளரும் இரப்பர் மரங்களிலிருந்து இரப்பர் பால், குடுவைகளில் சேகரிக்கப் பெற்று, ஆலைகளுக்கு அனுப்பப் பெற்று, சில வேதிப் பொருள்கள் சேர்க்கப்பட்டு, கெட்டியான இரப்பர் பாளங்கள் தயாரிக்கப்படுகின்றன !

 

இந்தப் பாளங்களை மூலப் பொருளாகக் கொண்டு பலவிதமான பயன்பாட்டுப் பொருள்கள் பல்வேறு ஆலைகளில் உருவாக்குகிறார்கள் !


 

இரப்பர் பால் பிசு பிசுப்பான ஒரு நீர்மம்  (திரவம்). எனவே இதுவும் பிசின்தான். பிசின்என்பதைக் குறிக்கும் பயின்என்னும் சொல் முன்பு பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது வழக்கொழிந்த சொல்லாக ஆகிவிட்டது !

 

 இரப்பர் என்பதைத் தமிழில் எவ்வாறு அழைப்பது ?

 

ரப்பர் என்ற ஆங்கிலச் சொல்லை, சில மொழி பெயர்ப்பாளர்கள் இரப்பர்ஆக்கினர். பின்பு தேய்ப்பான்” “அழிப்பான்என்றெல்லாம் உரு மாறிற்று. தமிழ் அறிஞர்கள் சிலர் அதை இழுவை” “தொய்வைஎன்றனர் !

 

இரப்பரின் இழுவை” “தொய்வுத் தன்மைகள் நீக்கப் பெற்று கற்பாறை போல் தொய்வுஅடையாத, நீட்சி அடையாத பொருள்கள் கூட இக்காலத்தில் தயாரிக்கப்படுகின்றன. எனவே தொய்வைஎன்ற சொல்லுக்கு மாற்றாக வேறு சொல் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும் !

 

இரப்பர் என்பது, அடிப்படையில், இரப்பர் மரப்பாலில் இருந்து உருவாகும் பிசின்தானே. பிசின்என்பதற்கு இன்னொரு பெயர் தான் பயின்” “. “பயின்என்ற தமிழ்ச் சொல்லை இரப்பருக்கு ஏன் சூட்டக்கூடாது.

 

பயின் என்ற சொல் சுருங்கிய வடிவினதாகவும், பொருள் பொதிந்ததாகவும், ஒலி நயம் உடையதாகவும் உள்ளது .எனவே இரப்பர் என்பதை இனி பயின்என்றே அழைப்போமே !

 

பயின்என்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !

 

 ==================================================

 

RUBBER

= பயின்

RUBBER MAT

= பயின் பாய்

RUBBER MATERIALS

= பயின் சரக்குகள்

RUBBER TUBE

= பயின் குழல்

RUBBER GOODS

= பயின் பொருள்கள்

RUBBER FACTORY

= பயினாலை

RUBBER ESTATE

= பயின் தோட்டம்

RUBBER BELT

= பயின் நாடா

RUBBER SHEET

= பயின் தகடு

RUBBER STAMP

= பயினச்சு

RUBBER BAND

= பயின் வளையம்

 

===================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052: சிலை (மார்கழி) 02]

{17-12-2021}

===================================================

பயின் = RUBBER.