-------------------------------------------------------------------------------------
ஆலமரம், அத்தி மரம், கருவேல மரம், முருங்கை மரம் போன்ற
மரங்களிலிருந்து பால் அல்லது சாறு வடியும் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தப்
பால் உலர்ந்து கெட்டியாகி “பிசின்” கிடைக்கிறது !
அது போலவே இரப்பர்
மரத்தின் பட்டையிலிருந்து வடியும் பால், உலர்ந்தால் கெட்டியாகி ”பிசின்” ஆகிறது !
தோட்டங்களில் வளரும்
இரப்பர் மரங்களிலிருந்து இரப்பர் பால், குடுவைகளில் சேகரிக்கப் பெற்று, ஆலைகளுக்கு அனுப்பப் பெற்று, சில வேதிப் பொருள்கள் சேர்க்கப்பட்டு, கெட்டியான இரப்பர்
பாளங்கள் தயாரிக்கப்படுகின்றன !
இந்தப் பாளங்களை மூலப்
பொருளாகக் கொண்டு பலவிதமான பயன்பாட்டுப் பொருள்கள் பல்வேறு ஆலைகளில்
உருவாக்குகிறார்கள் !
இரப்பர் பால் பிசு பிசுப்பான ஒரு நீர்மம் (திரவம்). எனவே இதுவும் “பிசின்” தான். ”பிசின்” என்பதைக் குறிக்கும் “பயின்” என்னும் சொல் முன்பு பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆனால் இப்பொழுது வழக்கொழிந்த சொல்லாக ஆகிவிட்டது !
இரப்பர் என்பதைத் தமிழில்
எவ்வாறு அழைப்பது ?
“ரப்பர்” என்ற ஆங்கிலச் சொல்லை, சில மொழி பெயர்ப்பாளர்கள்
“இரப்பர்” ஆக்கினர். பின்பு “தேய்ப்பான்” “அழிப்பான்” என்றெல்லாம் உரு
மாறிற்று. தமிழ் அறிஞர்கள் சிலர் அதை “இழுவை” “தொய்வை” என்றனர் !
இரப்பரின் ”இழுவை” “தொய்வு”த் தன்மைகள் நீக்கப்
பெற்று கற்பாறை போல் “தொய்வு” அடையாத, நீட்சி அடையாத பொருள்கள் கூட இக்காலத்தில் தயாரிக்கப்படுகின்றன.
எனவே “தொய்வை” என்ற சொல்லுக்கு மாற்றாக
வேறு சொல் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும் !
இரப்பர் என்பது, அடிப்படையில், இரப்பர் மரப்பாலில்
இருந்து உருவாகும் ”பிசின்” தானே. ”பிசின்” என்பதற்கு இன்னொரு பெயர் தான் “பயின்” “. “பயின்” என்ற தமிழ்ச் சொல்லை இரப்பருக்கு ஏன் சூட்டக்கூடாது. ?
”பயின்” என்ற சொல் சுருங்கிய
வடிவினதாகவும்,
பொருள் பொதிந்ததாகவும், ஒலி நயம் உடையதாகவும்
உள்ளது .எனவே இரப்பர் என்பதை இனி “பயின்” என்றே அழைப்போமே !
“பயின்” என்ற சொல்லின்
அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் காண்போமா !
==================================================
RUBBER |
= பயின் |
RUBBER MAT |
= பயின் பாய் |
RUBBER MATERIALS |
= பயின் சரக்குகள் |
RUBBER TUBE |
= பயின் குழல் |
RUBBER GOODS |
= பயின் பொருள்கள் |
RUBBER FACTORY |
= பயினாலை |
RUBBER ESTATE |
= பயின் தோட்டம் |
RUBBER BELT |
= பயின் நாடா |
RUBBER SHEET |
= பயின் தகடு |
RUBBER STAMP |
= பயினச்சு |
RUBBER BAND |
= பயின் வளையம் |
===================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052: சிலை (மார்கழி) 02]
{17-12-2021}
===================================================
பயின் = RUBBER. |