ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

வெள்ளி, 17 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (22) சத்துணி = CHUTNEY.


CHUTNEY = சத்துணி 

-----------------------------------------------------------------------------------------------

 

உணவுப் பொருள்களான அரிசி, காய்கள், கிழங்கு, கீரை முதலியவை சமைத்துப் பயன்படுத்தப்பட்டால் அதில் உள்ள சத்துப் பொருள்கள் பெருமளவுக்கு அழிந்து விடுகிறன என்பதைப் படித்திருக்கிறோம் !

 

அவித்தல், வறுத்தல், பொரித்தல், வதக்கல் போன்ற சமையல் செயல்பாடுகளின் போது இவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்கள் (Vitamins) பெருமளவு அழிந்து போகின்றன. இறுதியில் உயிச்சத்துக்களை இழந்துவிட்டு, சத்துக் குறைந்த வெறும் சக்கைகளைத்தான் நாம் உண்கிறோம் !

 


உண் என்ற வினைச் சொல்லின் அடிப்படையில் பல சொற்கள் உருவாகிப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம் !

 

1. உண் - உண்டி = உணவு 

 

2. உண் -  உணா = உணவு 

 

3. உண் - ஊண் = உணவு

 

4 .உண் -  உணி = உணவு

 

5. உண் - [ உணி ]- உணவு

 

உண்டிகொடுத்தோர்உயிர்கொடுத்தோரே என்னும் முதுமொழியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதில் வரும் உண்டிஎன்பது உணவைக்குறிக்கும் சொல் !

 

கட்டுச்சோறு என்பதைக் கட்டுணாஎன்பது முன்னோர் வழக்கு. இதற்கு ஆற்றுணாஎன்ற இன்னொரு பெயருமுண்டு. இதில் வரும் உணாஎன்னும் சொல்லும் உணவைக்குறிப்பதே !

 

பழியஞ்சிப் பாத்து ஊண் உடைத்தாயின்...என்பது வள்ளுவர் வாக்கு. இதில் வரும் ஊண்என்ற சொல்லும் உணவுஎன்பதைக் குறிக்கும் சொல்லே !

 

உணிஎன்றால் என்ன ? உண்ணப் பெறுவது எல்லாமே உணிதான் என்கிறது தமிழகராதி. உண்ணப் பெறுவதற்கு உணவுஎன்று தானே பெயர். அப்படி உண்ணப்பெறும் உணவும் சத்து மிகுந்ததாக இருப்பின் அதன் பெயர் சத்துணி. (சத்து + உணி = சத்துணி) எனப்படும். அதென்ன சத்துணி ?

 

நாம் இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்கிறோமே, அந்த சட்னியில் பல வகைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும் !

 

தேங்காய்ச் சட்னி , தக்காளிச் சட்னி, கொத்துமல்லிச் சட்னி, புதினாச் சட்னி, இன்னும் சிலவும் உண்டு. சரி ! 

 

தேங்காய்ச் சட்னியில் என்னென்ன சேர்க்கப் படுகின்றன ? துருவிய தேங்காய், பொட்டுக் கடலை, பச்சை மிளகாய் ,சிறிது புளி, இஞ்சி, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை. கொஞ்சம் உப்பு !

 

இவற்றுள் பொட்டுக்கடலை வறுபட்டதாயினும் சத்து மிகுந்தது, குழந்தை உணவாகப் பயன்படுவது. மற்றவை எல்லாம் பச்சையானவை அதாவது - வெப்பம் காணாதவை!

 

நாம் சமைக்கும் உணவு வகைகளில் வெப்பம் காணாத ஒன்றேயொன்று சட்னிதான். வெப்பப் படுத்தலுக்கு உட்படாத எந்த உணவும் சத்து மிகுந்தது என்பது நமக்குத் தெரியும் !

 

எனவே, அவித்தல், வறுத்தல், பொரித்தல், வதக்கல், துவட்டல்  போன்ற எந்தவிதமான சமையல் கூறுகளுக்கும் உட்படுத்தப் படாத சட்னிதான் நாம் உண்பதிலேயே சத்து மிக்க உணவு ஆகும் !

 

சத்து + உணி (உணவு) = சத்துணி என்பது காலப்போக்கில் உருமாறி இன்று சட்னிஆகிவிட்டது. சட்னி என்பது எந்த மொழிச் சொல் என்பதில் பலருக்கு ஐயப்பாடு உண்டு. இப்போது புரிகிறதா ? சட்னி என்பது தமிழ்ச்சொல்லே ! 

 

எழுத்து வடிவில் வரும்போது மட்டுமாவது சத்துணிஎன்று எழுதுங்களேன் !!

 

இட்லி என்பது இட்டளிஎன்பதன் சிதைந்த வடிவம். இடு + அவி -  இட்டு + அவி = இட்டவி -  இட்டளி -  இட்லி.

 

========================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்.

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய தமிழ்ச்  சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 02]

{17-12-2021} 

=======================================================

சத்துணி = CHUTNEY.