ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

திங்கள், 13 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (13) ஆளி = SWITCH.


ஆளி = SWITCH.

-------------------------------------------------------------------------------------

ஆள் ( Person ) என்னும் சொல் ஒரு தனி நபரையும் குறிக்கும்; ”ஆளுதல்” ( To Rule ) என்ற கருத்தையும் குறிக்கும். தனி நபரைக் குறிக்கும் ஆள்என்னும் பெயர்ச் சொல்லின் அடிப்படையில் பல புதிய பெயர்ச் சொற்கள் பிறக்கின்றன. சிலவற்றைப் பாருங்கள் !

         கூட்டு + ஆள் + இ = கூட்டாளி

         நோய் + ஆள் + இ = நோயாளி

         தொழில் + ஆள் + இ = தொழிலாளி

         ( “என்பது விகுதி)

          
ஆள்
என்பது ஏவல் வினை. இந்த வினைச் சொல்லுக்கு ஆட்சி செய்என்று பொருள். இந்த வினைச் சொல்லின் அடிப்படையில் ஆட்சி”, “ஆட்சியர்”, “ஆளுநர்போன்ற பெயர்ச் சொற்கள் உருவாகின்றன !

          



மாவட்ட ஆட்சியர்என்று சொல்கிறோம். அவர் யார் ? ஒரு மாவட்ட நிர்வாகத்தையே தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருப்பவர். ஆளுநர்என்பவர் ஒரு மாநில நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். ஆட்சிபுரிதல் என்றால் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் என்று பொருள் !

          
ஆள் என்னும் வினைச்சொல்லின் அடிப்படையில் தோன்றும் பெயர்ச்சொல் உயர் திணையாக இருந்தால் ஆட்சியர்”, என்றோ ஆளுநர்என்றோ சொல்கிறோம். அதுவே அஃறிணையாக இருந்தால் ஆளிஎன்று தான் சொல்ல வேண்டும் !

          
ஒரு மின் சுற்றில் சில மின் விளக்குகள் இணைக்கப் பட்டுள்ளன. அந்த விளக்குகளை எரிய வைப்பதற்கோ அல்லது அமர்த்துவதற்கோ ( OFF ) வசதியாக ஒரு சுவிச் (Switch) அந்தச் சுற்றில் கூடுதலாக இணைக்கப் படுகிறது. இப்பொழுது அந்த சுவிச்சின் பணி என்ன ?

           
அந்த மின் சுற்றில் மின்னோட்டத்தை அனுமதித்து விளக்குகளை எரிய வைப்பதும் அந்த சுவிச் தான்; மின்னோட்டத்தைத் துண்டித்து விளக்குகள் (எரியாமல்) அமர்த்துவதும் அந்த சுவிச் தான். வேறு வகையில் சொன்னால், அந்த மின் சுற்றில் செல்லும் மின்னோட்டத்தையும், இணைக்கப் பட்டுள்ள விளக்குகளையும் கட்டுப்படுத்தி ஆளும் பணியை சுவிச் செய்கிறது !

           
ஆளுதல் என்றால் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் என்பதை முன் பத்தியில் பார்த்தோமல்லவா ? இணைக்கப் பட்டுள்ள மின் சுற்றினை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சுவிச்சை ஆளி என்று சொல்லுதல் பொருத்தமானது தானே ?

          
ஆளி என்ற சொல்லுக்கு ஆள்வோன்”, யாளி, சிங்கம், என்று பல பொருள்களைச் சொல்கிறது தமிழகராதி. சுவிச் என்பது அஃறினைச் சொல் என்பதால் ஆள்வோன்என்று சொல்ல முடியாது. ஆளிஎன்று தான் சொல்ல முடியும். ஆளிஎன்ற சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போமா !

 

 

=======================================================

 

SWITCH

= ஆளி

FLUSH SWITCH

= பதி (வகை) ஆளி

TUMBLER SWITCH

= புடை (வகை) ஆளி

CONCEALED SWITCH

= பொதி (வகை) ஆளி

SINGLE POLE SWITCH

= ஒரு முனை ஆளி

DOUBLE POLE SWITCH

= இரு முனை ஆளி

ONE WAY SWITCH

= ஒரு வழி ஆளி

TWO WAY SWITCH

= இரு வழி ஆளி

INTERMEDIATE SWITCH

= இடை(வழி) ஆளி

TOGGLE SWITCH

= பதுங்கு ஆளி

BED SWITCH

= பாயல் ஆளி

MAIN SWITCH

= முதன்மை ஆளி

PORCELAIN SWITCH

= பீங்கான் ஆளி

BAKELITE SWITCH

= பயின்கரி ஆளி

SOCKET SWITCH

= குதை ஆளி

PULL – PUSH SWITCH

= அமுக்கிழு ஆளி

ROTARAY SWITCH

= ஊர்முனை ஆளி

RELAY SWITCH

= ஏவு ஆளி

REVERSIBLE SWITCH

= இட வல ஆளி

 

 

=======================================================

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[திஆ: 2052, நளி (கார்த்திகை) 27]

{13-12-2021)

 

======================================================

ஆளி = SWITCH.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக