ஏணாள் = WEEK
--------------------------------------------------------------------------------------------
நொடி, நிமிடம், மணி, காலை, நண்பகல், மாலை இரவு, நாள், வாரம், ஆண்டு, பத்தாண்டு, நூறாண்டு போன்ற சொற்கள் காலத்தைக் குறிப்பவை. இவற்றுள் வாரம் என்பதைத்
தவிர பிற அனைத்தும் தமிழ்ச்சொற்களே !
வாரம் என்பது சமற்கிருதச் சொல்லான ‘வார்’ என்பதிலிருந்து திரிக்கப்பட்ட சொல். சமற்கிருதத்தில் ஞாயிற்றுக் கிழமை என்பதைச் சூர்ய வார்
என்றும் திங்கட் கிழமையைச் சோம வார் என்றும் கூறுவார்கள் !
இவ்வாறே பிற கிழமைகளை மங்கள் வார், புத் வார், குரு வார், சுக்ர வார், சனி வார் என்று அழைப்பார்கள். இடைக்காலத் தமிழர்கள் “வார்” என்னும் சொல்லை “வாரம்” என்று திரித்துத் தமிழில்
புழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட்டனர் !
கிழமை என்னும் சொல்லே சமற்கிருத்ததில் ‘வார்’ என்று வழங்கப்படுகிறது. கிழமை என்பது நாளையும், ‘வார்” எனப்படும் வாரம் ஏழு
நாள்கள் கொண்ட காலப் பகுதியையும் குறிக்கும் சொல்லாகப் புழக்கத்தில்
இருந்து வருகிறது !
சரி ! கிழமை என்பது நாளைக் குறிக்கும் சொல்லாகிவிட்ட பிறகு ’ வாரம்’ என்பதைத் தமிழில் எவ்வாறு
குறிப்பிடுவது ? மடிமைக்கு இடம்
கொடுத்துவிட்ட தமிழர்கள் ‘வாரம்’ என்பதற்குப் புதுச் சொல் கண்டுபிடித்துப் புழக்கத்திற்குக்
கொண்டுவராமல் ‘வாரம்’ என்றே சொல்லத்
தலைப்பட்டுவிட்டனர் !
வார இதழ்கள், வாராந்திர அறிக்கை, வாராந்திர வரவு-செலவு, வாராந்திர முன்னேற்றம், வாராந்திர விற்றுமுதல்
என்று WEEK என்பதைக் குறிக்கும் WEAKLY என்னும் ஆங்கிலச் சொல்
தமிழர்கள் எழுத்திலும் பேச்சிலும் ‘வாராந்திரம்” என்று நிலைபெற்றுவிட்டது !
சரி ! ”வாரம்”, “வாராந்திரம்” என்னும் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா ? ஏற்றுக் கொண்டால் நாம் தமிழுக்குச்
செய்யும் பெருந் தீங்காக அது அமைந்துவிடும் ! அப்புறம் வேறு என்ன
செய்வது ? புதிய சொல்லை
உருவாக்குவோமே !
வாரம் என்பது ஏழு நாள்கள் கொண்ட காலப் பகுதி என்பது உங்களுக்குத்
தெரியும். இதைக் கருவாக வைத்தே நாம்
புதுச் சொல் படைக்கலாம் ! வாரம் என்பது ஏழு நாள்கள்; ஏழு நாள்கள் என்பதை ஏழ்நாள் என்று சொல்லலாம். வாழ் + நாள் = வாணாள் என்பது போல, ஏழு + நாள் = ஏழ்நாள் > ஏணாள் என்று சொல்லலாம் !
ஏணாள் என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும்
பார்ப்போமா !
-------------------------------------------------------------------------------------
WEEK..........................................= ஏணாள்
WEEKLY
JOURNAL................= ஏணாளிதழ்
WEEKLY
REPORT....................= ஏணாள் அறிக்கை
WEEK-END
HOLIDAYS.........= ஏணாள் ஈற்று விடுமுறை
WEEK-WAR PROGRAME.....= ஏணாள் செயல்திட்டம்
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
”புதிய சொல்லாக்கம்” வலைப்பூ,
[தி.பி: 2052, சிலை (மார்கழி) 06]
{21-12-2021}
----------------------------------------------------------------------------------------------
ஏணாள் = WEEK. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக