செங்களம் = CHESS
-----------------------------------------------------------------
செஸ் (Chess) விளையாட்டுப் பற்றித் தமிழ்ப் பணி மன்ற
நண்பர்கள் அறிவார்கள். சிலர் அதில் வாகையம் (Champion ship) பெற்றவர்களாகவும்
இருக்கக்கூடும். உலக அளவில் உற்று நோக்கப்படும் இந்த செஸ் விளையாட்டின் அடிப்படைக்
கருத்து என்ன ?
இரண்டு நாடுகள் அருகருகே உள்ளன.. அவற்றின் மன்னர்கள் போருக்குத் தயார் ஆகிறார்கள். யானைப்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகளுடன் வந்து போர்க்களத்தில் சந்திக்கிறார்கள் !
இரண்டு படைகளும் மோதுகின்றன. இறுதியில், படைகளை
நடத்திச் செல்வதில் எந்த மன்னன் தவறு செய்கிறானோ அவன் வலிமை குன்றிப் போகிறான்.
அந்த மன்னனை எதிரணிப் படைகள் சூழ்ந்து கொண்டு தளைப்படுத்துகின்றனர். (கைது
செய்கின்றனர்). இது தான் செஸ் ஆட்டத்தின் உட்பொருள் !
”செஸ்“ என்னும் ஆங்கிலச் சொல்லை “சதுரங்கம்” என்று மொழிபெயர்த்து இருக்கிறார்கள். .”சதுரங்கம்” என்பது தமிழ்ச் சொல்லே அல்ல. ”சதுர்” என்னும் வடமொழிச் சொல்லுக்கு “நான்கு” என்று தமிழில் பொருள் !
போர்ப் படையின் நான்கு உறுப்புகளான யானைப்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை, காலாட்படை
ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு “சதுரங்கம்” என்ற சொல்லைப் படைத்து இருக்கிறார்கள் போலும் ! .”சதுரங்கம்“
என்பதத் தமிழில் “ நாற்படைகள்” என்று கூறலாம் !
“செஸ்” ஆட்டத்தின் மையக்களம் எது ? இரண்டு எதிரெதிர்ப் படைகளும் ஒன்றையொன்று நேருக்கு நேர் சந்திக்கும்
போர்க்களம் தானே ! இந்தக் களத்தில்தான் இரண்டு படைகளும் மோதுவதற்கு
திட்டங்கள் வகுக்கப்படுகின்றன; மோதுகின்றன; ஒன்று எழுகிறது; மற்றொன்று வீழ்கிறது !
இத்தகைய முதன்மை இடம் பெறும் ”போர்க்களத்தினை”
மையமாக வைத்து இந்த ஆட்டத்திற்குப் பெயர் சூட்டுவது பொருத்தமாக
இருக்கும் “.போர்க்களம்” என்பதைக்
குறிக்க “செங்களம்” என்ற சொல்லும்
பயன்பாட்டில் இருந்திருக்கிறது !
எனவே ”செஸ்”. விளையாட்டிற்கு
நாம் “செங்களம்” என்று புதுப் பெயரைச்
சூட்டலாம். “செங்களம்” என்ற சொல்
பொருள் நயமும், ஒலி நயமும், சுருங்கிய
வடிவும் உடையதாக இருப்பதால் “செஸ்” என்பதை
இனி “செங்களம்” என்றே அழைப்போமே !
“செங்களம்” தொடர்பான பிற சொற்களையும்
பார்ப்போமா?
=================================================
CHESS.....................................=
செங்களம்
CHESS BOARD.......................= செங்களரி
CHESSMEN.............................= களமர்
KING.........................................= மன்னன்
QUEEN / MINISTER............... = தளவாய்
ELAPHANT /FORT..................= யானைப்படை
CANNON / ROOK....................= பீரங்கிப்படை
HORSE....................................= புரவிப் படை
PAN..........................................= காலாட்படை
CHECK-MATE.........................= தளைப்பு
CHESS TOURNAMENT...........= செங்களப் போட்டி
CHESS CHAMPION.................= செங்கள வாகையர்
CHAMPIONSHIP......................= வாகையம்
=============================================
போரில் பங்கேற்கும் படை அல்லது படைத்
தலைமைக்கு QUEEN /
MINISTER / COMMANDANT; FORT / ELEPHANT ; BISHOP / CANNON / ROOK என
வெவ்வேறு பெயர்கள் வழங்குகின்றன. அவரவர் விருப்பப்படி பெயர்களைத் தேர்வு செய்து
கொள்ளலாம்.
==============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,
[தி.ஆ: 2052, நளி (கார்த்திகை)18]
{04-12-2021}
==================================================
செங்களம் = CHESS |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக