ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

செவ்வாய், 21 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (59) ஏணாள் = WEEK.


ஏணாள் =  WEEK

--------------------------------------------------------------------------------------------

நொடி, நிமிடம்மணிகாலைநண்பகல்மாலை இரவுநாள்வாரம்ஆண்டுபத்தாண்டுநூறாண்டு போன்ற சொற்கள் காலத்தைக் குறிப்பவை.  இவற்றுள் வாரம் என்பதைத் தவிர பிற அனைத்தும் தமிழ்ச்சொற்களே !

 

வாரம் என்பது சமற்கிருதச் சொல்லான ‘வார்’ என்பதிலிருந்து திரிக்கப்பட்ட சொல்.  சமற்கிருதத்தில்  ஞாயிற்றுக் கிழமை  என்பதைச் சூர்ய வார் என்றும் திங்கட் கிழமையைச் சோம வார் என்றும் கூறுவார்கள் !

 

இவ்வாறே பிற கிழமைகளை மங்கள் வார்புத் வார்குரு வார்சுக்ர வார்சனி  வார் என்று  அழைப்பார்கள்.  இடைக்காலத் தமிழர்கள் “வார்” என்னும் சொல்லை “வாரம்” என்று திரித்துத் தமிழில் புழக்கத்திற்குக் கொண்டுவந்துவிட்டனர் !

 

கிழமை என்னும் சொல்லே சமற்கிருத்ததில் ‘வார்’ என்று வழங்கப்படுகிறது.  கிழமை என்பது நாளையும், ‘வார்” எனப்படும் வாரம் ஏழு நாள்கள் கொண்ட காலப் பகுதியையும் குறிக்கும்  சொல்லாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது !

 

சரி ! கிழமை என்பது நாளைக் குறிக்கும் சொல்லாகிவிட்ட பிறகு ’ வாரம்’ என்பதைத் தமிழில் எவ்வாறு குறிப்பிடுவது ? மடிமைக்கு இடம் கொடுத்துவிட்ட தமிழர்கள் ‘வாரம்’ என்பதற்குப் புதுச் சொல் கண்டுபிடித்துப் புழக்கத்திற்குக் கொண்டுவராமல் ‘வாரம்’ என்றே  சொல்லத் தலைப்பட்டுவிட்டனர் !

 

வார இதழ்கள்வாராந்திர அறிக்கை,  வாராந்திர வரவு-செலவு,  வாராந்திர முன்னேற்றம்வாராந்திர விற்றுமுதல் என்று WEEK என்பதைக் குறிக்கும் WEAKLY என்னும் ஆங்கிலச் சொல் தமிழர்கள் எழுத்திலும் பேச்சிலும் ‘வாராந்திரம்” என்று  நிலைபெற்றுவிட்டது !

 

சரி ! வாரம்”, “வாராந்திரம்”  என்னும் சொற்களை அப்படியே ஏற்றுக் கொள்ளலாமா ?  ஏற்றுக் கொண்டால்  நாம் தமிழுக்குச் செய்யும் பெருந் தீங்காக அது அமைந்துவிடும் ! அப்புறம் வேறு என்ன செய்வது ? புதிய சொல்லை உருவாக்குவோமே !

 

வாரம் என்பது ஏழு நாள்கள் கொண்ட காலப் பகுதி என்பது உங்களுக்குத் தெரியும்இதைக் கருவாக வைத்தே நாம் புதுச் சொல் படைக்கலாம் ! வாரம் என்பது ஏழு நாள்கள்ஏழு நாள்கள் என்பதை ஏழ்நாள் என்று சொல்லலாம்.  வாழ் + நாள் = வாணாள்  என்பது போலஏழு + நாள் = ஏழ்நாள் > ஏணாள்  என்று சொல்லலாம் !

 

ஏணாள் என்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் பிற சொற்களையும் பார்ப்போமா !

 

-------------------------------------------------------------------------------------

                WEEK..........................................= ஏணாள்

                WEEKLY JOURNAL................= ஏணாளிதழ்

                WEEKLY REPORT....................= ஏணாள்  அறிக்கை

                WEEK-END HOLIDAYS.........= ஏணாள் ஈற்று  விடுமுறை

                WEEK-WAR PROGRAME.....= ஏணாள் செயல்திட்டம்

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

”புதிய சொல்லாக்கம்” வலைப்பூ,

[தி.பி: 2052, சிலை (மார்கழி) 06]

{21-12-2021}

----------------------------------------------------------------------------------------------

 ஏணாள் = WEEK.