கதுவை = VICE
-------------------------------------------------------------------------------------
பணிமனைகளில் எந்தப் பொருளையும்
திருத்தம் செய்வதற்கு முன்பு அதை நழுவாமல் இறுக்கமாகக் கவ்விப் பிடிப்பதற்கு வைஸ்
(Vice) என்னும்
பிடிகருவியைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள் !
இந்தக் கருவியின் தாடைகளுக்கு இடையில்
திருத்தம் செய்ய வேண்டிய பொருளை நிறுத்தி, தாடைத் திருகு மூலம் இறுக்கி விட்டால், முதலைப் பிடிதான்.
பொருள் நழுவ முடியாது !
இறுக்கமாகக் கவ்விப் பிடித்தல்
என்பதைக் குறிக்கத் தமிழ் இலக்கியங்களில் “
கதுவு “ , “ கதுவுதல் “ என்னும்
சொற்கள் கையாளப் பட்டுள்ளன. “ பொதி இரை கதுவிய போழ் வாய்
வாளை “ என்பது பெரும் பாணாற்றுப் படை என்னும் இலக்கியத்தில்
காணப்படும் வரி !
(வரி : 287).
இதே இலக்கியத்தில் வேறு ஒரு இடத்தில் “ கொடு வாள் கதுவிய வடு
ஆழ் நோன் கை “ என்ற வரி வருகிறது ! (வரி ; 471)
வைஸ் என்பதை “ பிடிச்சிராவி “
“ பிடிப்பான் “ “ பிடி தண்டு “ என்று பலவாறாக அழைக்கின்றனர். இவற்றில் ஒலி நயமும் இல்லை; சுருங்கிய வடிவும் இல்லை !
கதுவும் (கவ்விப் பிடிக்கும்) செயலைச் செய்கின்ற
கருவியைக் “ கதுவை “ என்று அழைக்கலாமே
! பொருள் நயமும் இருக்கிறது ! ஒலி நயமும் இருக்கிறது ! சுருங்கிய வடிவும்
இருக்கிறது ! கதுவையின் அடிப்படையில் பிறக்கின்ற பிற சொற்களையும் பாருங்கள் !
==============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ.
[தி.ஆ:2052. நளி (கார்த்திகை) 14]
{30-11-2021}
==============================================
விசிக் கதுவை = BENCH VICE |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக