ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

சனி, 18 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (37) உருளி உறுப்புகள் = CYCLE PARTS.

உருளி = CYCLE
-------------------------------------------------------------------------------------


மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப் பெற்ற சைக்கிள்வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் உடைய வண்டி என்ற கருத்தில் பை-சைக்கிள்என்று பெயரிடப்பட்டது. காலப் போக்கில் பை-சைக்கிள்மறைந்து சைக்கிள்என்ற சொல் நிலைபெற்று விட்டது !

பை-சைக்கிள் என்பதை தமிழில் மொழிபெயர்த்த வடமொழி ஆர்வலர்கள் அதை துவிச்சக்கர வண்டிஎன்றனர். பின்னாளில் அது இரு சக்கர வண்டிஆயிற்று. வேறு சில தமிழறிஞர்கள் அதை மிதி வண்டிஎன்று அழைக்கலாயினர் !


தனித்தமிழில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் அதை ஈருருளிஎன்று மொழியாக்கம் செய்தனர். இரு + உருளி = ஈருருளி என்றாகும். ஈருருளி என்றால் இரண்டு உருளிகள் (சக்கரங்கள்) உடைய வண்டி என்று பொருள் !


பை-சைக்கிள் என்ற சொல் சுருங்கி சைக்கிள்ஆகிவிட்டது. பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் சைக்கிள்என்ற சொல்லே நிலை பெற்றுவிட்டது. எனவே நாமும் ஈருருளியைக் கைவிட்டு உருளிஎன்றே உரைப்போமே !



சரி ! உருளிஎன்ற சொல் பொருத்தம்தானா ? ஆம் எனில் எப்படி ? “உல்என்னும் வேர்ச்சொல் வளைதல்கருத்தை உணர்த்தும். உல் என்னும் வேரினின்று கிளைத்து, நீண்டு, திரிபடைந்து பல்வேறு சொற்கள் தமிழில் புழங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் உருளி”. எப்படி ? உல் > உர் > உருள் > உருளி = (வளைதற் கருத்தை உணர்த்தும்) வட்ட வடிவமான ஆழி, அதாவது சக்கரம் என்று பொருள் !



சைக்கிள் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு மிகச் சரியான மொழியாக்கம் உருளிஎன்பதே ! ஆகையால் சைக்கிள்என்பதை இனி உருளிஎன்றே சொல்வோம். உருளியின் உறுப்புகள் பெயரெல்லாம் ஆங்கிலத்தில் இருக்கிறதே ! அவற்றையும் தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டாமா ? செய்திருக்கிறோம் ! பாருங்களேன் !!

 

================================================

CYCLE

உருளி

CYCLE - FRAME

பழுவம் (பழு > பழுவம்)

CYCLE - FORK

கவைக்கால்

CYCLE - WHEEL

ஆழி

CYCLE - RIM

வட்டகை

CYCLE - WHEEL SPOKE

ஆரை (ஆரக்கம்பி)

CYCLE - WHEEL HUB

குடம் (ஒ.நோ: வண்டிக்குடம்)

CYCLE - HUB PLATE

குடமூடி

CYCLE- - WHEEL AXLE

இருசு

CYCLE - AXLE CONE

குவிசுரை

CYCLE - TYRE

தூம்புறை (தூம்பு + உறை)

CYCLE - CHAIN

சங்கிலி

CYCLE-  PEDAL

மிதியடி

CYCLE - CRANK WHEEL

ஏராழி (ஏர் + ஆழி)

CYCLE - CRANK SHAFT

ஏர்க்கால் (ஏர்=எழுதல்)

CYCLE - FREEWHEEL

முள்ளாழி

CYCLE - CARRIER

சுமைதாங்கி

CYCLE - MUD-GUARD

மட்காப்பு

CYCLE - DANGER LIGHT

சிவலை விளக்கு

CYCLE - REFLECTOR

சொலிப்பு வில்லை

CYCLE - STAND

உருளித் தளி

CYCLE - BRAKE

தடையம்

CYCLE - BRAKE SHOE

தடையக் கட்டை

CYCLE - BALLS

பரல்கள்

CYCLE – BELL

மணி

CYCLE - SADDLE

இருக்கை

CYCLE- DYNAMO

ஈமின்கூடு

CYCLE - DOOM

குடவிளக்கு

CYCLE PARKING STAND

உருளி நிறுத்தகம்

CYCLE REPAIR SHOP

உருளிச் சீரகம்

CYCLE - OVERHAULING

முற்றாய்வு.

 

================================================== 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[திஆ: 2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021}

=================================================

உருளி உறுப்புகள் = CYCLE PARTS.


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக