ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் உருவாக்குதல்.

விரும்பும் பதிவைத் தேடுக.

சனி, 18 டிசம்பர், 2021

புதுச்சொல் புனைவு (வை.வேதரெத்தினம்) (36) வில்லூரி = EMPORIUM, MART, STORES

 


வில்லூரி = EMPORIUM, MART, STORES

-------------------------------------------------------------------------------------


உல்என்னும்
வேர்ச் சொல் உள்ளொடுங்கும் கருத்தை உணர்த்துவது. உள்ளொடுங்கல் என்றால் குறிப்பிட்ட வரம்புக்குள் அடங்குதல் என்று பொருள்!

 

உல் > உர் > ஊர் = நாற்புறமும் எல்லைகளைக் கொண்டு, அவ்வெல்லைகளுக்கு உள்ளொடுங்கி அமைவதால் தான் அதற்கு ஊர்என்று பெயர். சிற்றூர், பேரூர் எதுவாக இருந்தாலும், நாற்புறமும் எல்லைகளைக் கொண்டு அவற்றுக்கு இடையே தானே அவை அமைகின்றன ! 

 

உல்எனும் வேர்ச்சொல், உல் > உர் > ஊர் > ஊரி என்று திரிந்து குறிப்பிட்ட வரம்புகளுக்கு உட்பட்டு அமைந்துள்ள இடம்என்ற பொருளை உணர்த்தும் ! 


 

கல் + ஊரி = கல்லூரி. கல்லூரி என்ற சொல் இங்கு எதைக் குறிக்கிறது ? நாற்புறமும் குறிப்பிட்ட எல்லைகளை உடைய வளாகத்தில் (CAMPUS) அமைந்துள்ள கல்வி கற்பிக்கப்படும் கட்டடப் பகுதியைக் குறிக்கிறது அன்றோ ? இதிலிருந்து என்ன உணரப்படுகிறது

 

ஊரி என்பது இளமை, சங்கு, முகில், புல்லுருவி ஆகிய கருத்துகளுடன் இடம்என்ற கருத்தையும் நமக்கு உணர்த்துகிறது. ஊரிஎன்பதை இடம்என்னும் சொல்லுக்குப் பகரமாக (பதிலாக) வைத்து வேறு பல சொற்களையும் நாம் உருவாக்க முடியும் !

 

வில் + ஊரி = வில்லூரி. பொருள்கள் விற்பனை செய்யப்படும் இடத்தை வில்லூரி எனச் சொல்வது பொருத்தம் தானே ? இப்போது MART, STORES, SHOP, STALL, EMPORIUM என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் விற்பனையகங்களைஇனி வில்லூரிஎன்னும் ஒரே சொல்லால் அழைப்போமே !

 

==================================================

 

FURNITURE MART..............

அறைகலன் வில்லூரி

STATIONARY MART............

= எழுதுபொருள் வில்லூரி

BOOK SHOP...........................

புத்தக வில்லூரி

FRUIT STALL........................

தேங்கனி வில்லூரி

TEA STALL............................

தேநீர் வில்லூரி

GROCERY STORES.............

= உண்பொருள்வில்லூரி

MEDICAL  STORES.............

= உறைபொருள் வில்லூரி

FANCY STORES.....................

புனைபொருள் வில்லூரி

UTENZIL STORES.................

அடுகலன் வில்லூரி

GLASS SALES EMPORIUM..

கண்ணாடி வில்லூரி

COMPUTER SALES EMPORIUM.............................


=
கணினி வில்லூரி

HAND LOOM TEXTILES......

= கைத்தறித் துணி வில்லூரி

==================================================

 

கொல் + ஊரி = கொல்லூரி. ஆங்கிலத்தில் SLAUGHTER HOUSE என்று சொல்வதை ஆட்டுத் தொட்டி, மாட்டுத்தொட்டி என்றும் மிருகங்கள் வதைப்பிடம் என்றும் பலவாறு சொல்கிறோம். இதை கொல்லூரிஎன்ற ஒரே சொல்லால் குறிப்பிடலாம்.

 

SLAUGHTER HOUSE........................= கொல்லூரி

இது போன்ற புதுச்சொற்களை இன்னும் புனைவோம் ! தமிழில் சொல் வளத்தைப் பெருக்குவோம்!!

 

===================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com0

ஆட்சியர்,

"புதிய தமிழ்ச் சொல்” வலைப்பூ,

[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 03]

{18-12-2021} 

=================================================

வில்லூரி = EMPORIUM, MART, STORES


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக